ஆஸ்கர் விருதை கைப்பற்ற வேண்டும் என பல இந்திய திரைப்பட கலைஞர்கள் ஆசைப்பட்டாலும். இதற்குமுன் இரு இந்தியர்களுக்கு மட்டுமே கனவுபலித்திருக்கிறது.
பானு அத்தையா : (காந்தி திரைப்படம்) - 1982: இந்தியாவின் முன்னணி உடை வடிவமைப்பாளர் பானு அத்தையா மும்பையை சேர்ந்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் உடைவடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். 1982ல்பிரிட்டனின் இயக்குனர் ரிச்சர்ட் அட்டன்பரோவின் "காந்தி' படத்தில் பணியாற்றியதற்காகஇவருக்கு சிறந்த உடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. இதன் மூலம் ஆஸ்கர் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. ஜான் மோலோ என்ற பிரிட்டன் உடை வடிவமைப்பாளருடன் ஆஸ்கர் விருதை இவர் பகிர்ந்துகொண்டார். அத்தையா உடை வடிவமைப்பாளராக பணியாற்றிய"லகான்' படம் ஆஸ்கரின் இறுதிச்சுற்று வரை சென்றது. இந்த படத்துக்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இது வரை இரண்டு முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார் பானு. ஆஸ்கர் விருதுக்குழுவின் உறுப்பினராகவும் இருக்கிறார்.
சத்யஜித்ரே - 1992: மேற்கு வங்கத்தை சேர்ந்த இயக்குனர் சத்யஜித்ரே. "பதேர் பாஞ்சாலி', "அபராஜிதோ' உள்ளிட்ட புகழ் பெற்ற படங்களை இயக்கியவர். இவரது "செஸ் பிளேயர்' படம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது. எனினும் விருது பெறவில்லை."கான்' விருது உள்ளிட்ட பல புகழ் பெற்ற சர்வதேச விருதுகள், 32 தேசிய விருதுகள், தாதா சாஹேப் பால்கே விருது என இந்திய சினிமாவின் மிகப்பெரிய சாதனையாளராக சத்யஜித் ரே திகழ்ந்தார்.
1992ம் ஆண்டு இவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அந்த ஆண்டே இவருக்கு "பாரத ரத்னா' விருதும் வழங்கப்பட்டது. 1992ல் சத்யஜித்ரே மறைந்தார். இயக்குனராக மட்டுமின்றி எழுத்தாளர், தயாரிப்பாளர், இசையமைப்பாளராகவும் இவர் சாதித்தார்.
Related Posts Plugin for WordPress, Blogger...

:: Useful web links List